(எம்.எப்.எம்.பஸீர்)

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தனது மகனின் திருமண நிகழ்வில் பங்கேற்க இன்று அனுமதி கோரினார். 

இந் நிலையில் அந்த கோரிக்கியை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் கவனத்துக்கு கொண்டுவருவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர்  பூஜித் ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போதே சந்தேக நபரின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தெகொட இந்த கோரிக்கையை முன்வைஒத்தார்.

'பூஜித் ஜயசுந்தரவின் மகனின் திருமணம் எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு கங்காராம விகாரையிலும் அதனை ஒத்த மற்றொரு நிகழ்வு அன்றைய தினம் இரவு 7 மணிக்கு நீர்பொழும்பு பகுதியிலும் இடம்பெறவுள்ளது. 

எனவே அன்றைய தினம் காலை முதல் 60 மணித்தியாலங்களுக்கு அவரை விடுவிக்க இடைக்கால உத்தரவொன்றை வழங்க வழங்க வேண்டும். அது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிடவும் என பூஜித் ஜயசுந்தர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட மன்றில் கோரியமை குறிப்பிடத்தக்கது.