நபர் ஒருவரின் தலை சலவை இயந்திரத்துக்குள் சிக்கிகொண்ட விபரீத சம்பவம் சீனாவில் பதிவாகியுள்ளது.

 சீனாவின் பியூஜின் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சலவை இயந்திரம் இயங்காமல் இருந்தமையால் தனது தலையை உள்ளே போட்டு பழுது பார்க்க முயற்சித்துள்ளார்.

 பின்னர் தனது தலையை வெளியே எடுக்க முயற்சித்தார். ஆனால், அவரால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.

அவரது நண்பர்களும் முயற்சித்துப் பார்த்து முடியாமல், தீயணைப்புப் படைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

 விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 6 பேர் தொடர்ந்து 40 நிமிடங்கள் போராடி அவரது தலையை சலவை இயந்திரத்திலிருந்து வெளியே எடுத்துள்ளனர். 

சலவை இயந்திரத்தை முற்றிலும் சிறிது, சிறிதாக உடைத்தே அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.