(நா.தனுஜா)
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நாம் ஒரே இடத்திலேயே தேங்கி நிற்கமுடியாது. எமது குறைபாடுகள் என்னவென்பதைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்துகொண்டு அடுத்தகட்டம் நோக்கிப் பயணிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரவித்தார்.
அதன்படி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நாம் முன்னோக்கிப் பயணிப்பதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தவிருக்கிறோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அச்சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
பல்கலைக்கழகங்களில் உள்ள எமது நாட்டின் இளைய தலைவர்களைச் சந்திப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்னர் எம்மால் ஒரே இடத்தில் தேங்கிநிற்க முடியாது.
அந்தவகையில் தற்போது பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் எம்மை வந்து சந்திப்பதுடன், அவர்களுடைய ஆலோசனைகளையும் முன்வைத்து வருகின்றனர். அதன்படி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நாம் முன்னோக்கிப் பயணிப்பதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தவிருக்கிறோம்.
நாம் எமது குறைபாடுகள் என்னவென்பதைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்துகொண்டு முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். நான் எப்போதும் இப்பதவியில் தொடர்ந்து இருக்கமாட்டேன்.
எனவே தற்போது புதிய தலைமைத்துவம் ஒன்றைக் கொண்டு வரவேண்டியிருக்கிறது. அதேபோன்று ஒருவருக்கொருவர் முரண்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து பொருத்தமான எதிர்காலத்திட்டத்தை வகுக்குமாறும் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என அவர் தெரிவித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM