“தமிழ் மக்கள் நம்பிக்கைப்பொறுப்பு” என்ற நிதியத்தின் மூலம் மருதங்கேணிப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிதியத்தின் முதலாவது திட்ட நிகழ்வானது இன்று செவ்வாய்க்கிழமை இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய நிதி அனுசரணையுடன் வடமராட்சியில் மருதங்கேணிப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அருட்தந்தை  இமானுவேல் இரவிச்சந்திரன், சிவஸ்ரீ சபாரட்ணசர்மா வாசுதேவசர்மா, பேராசிரியர் V.P.சிவநாதன் ஓய்வு நிலை அதிபர் க.அருந்தவபாலன், வைத்தியகலாநிதி சி.சிவன்சுதன், சட்டத்தரணி திருமதி.சு.சிவரூபவதி, கட்டடக்கலைஞர் த.சிற்பரன் மற்றும் ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர் திரு.க.இராஜதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.