Published by R. Kalaichelvan on 2019-12-17 16:39:02
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுதீயில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள 12 வயது சிறுவன் ஒருவர் தனது நாயுடன் அவரது சகோதரனின் ஜீப் வண்டியில் தப்பித்துச்சென்றுள்ளார்.

இதனால் உயிர் ஆபத்தில் இருந்து சிறுவனும் அவரது நாயும் சுமார் 128 கிலோ மீற்றர் தொலைவில் ,வீதியின் அருகில் இருந்து எவ்வித காயங்களும் இன்றி பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.
சிறுவனிற்கு வாகனம் ஒட்டும் திறன் இருந்ததால் அவர் பாரிய விபத்தில் இருந்து தப்பித்துக்கொண்டதாக சிறுவனை மீட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உண்டான காட்டுத் தீ காரணமாக சிட்னியில் காற்றின் தரமானது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப் பகுதி புகையினால் சூழப்பட்டுள்ளது.
இதனால் சிட்டினியின் பிரபல அடையாளங்களும் மறைக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் சிறுவர்களும், வயோதிபர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குபிப்பிடத்தக்கது.