தீவகம் மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் மண் அகழ்வினை சட்டரீதியாக எவ்வாறு தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் தீவகத்தில் நடைபெற்றது.கோத்தபாய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மண் அகழ்விற்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தின் மூலம் வரையறை இன்றி மண் அகழ்வு இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் வரையறையற்ற சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டோரின் உழவு இயந்திரம் ஒன்று மக்களால் அண்மையில் எரியூட்டப்பட்டது.தீவகத்துக்கு பொறுப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் ஆகியோர் இவ்விடயத்தை எவ்வாறு சட்டப்பூர்வமாக்க அணுகுவது தொடர்பில் குறித்த பிரதேச மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் .அதற்கு முன்பாக மண் அகழ்வு இடம்பெறும் இடங்களைப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அசோக் குமார் மற்றும் கிராமங்களின் கிராம அலுவலர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.