பொலிஸ் சுற்றுச் சூழல் பிரிவினர் மேல் மாகணத்தை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இந்த செயற்றிட்டம் தொடர்பான  துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டின் வளாகத்திற்கு வெளியே குப்பைகளை போட வேண்டாம் என்றும், குப்பைகளை பொது இடங்களில் வீசுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஆரம்பமாகும் இந்த விழிப்புணர்வுத் திட்டமானது ஒரு வாரத்திற்கு அமுல்படுத்தப்படும் என்றும், குறைந்தது 6 இலட்சம் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். 

இந்நிலையில், இன்று முதல் ஆரம்பமாகும் தூய்மையாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு திட்டம் ஒரு வாரத்திற்கு இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.