திருகோணமலை - தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் திருடிய கணவன் மற்றும் மனைவியை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் இன்று  (17) ஆஜர்படுத்திய போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை-சல்லி, சாம்பல்தீவு   பகுதியைச் சேர்ந்த  36 வயது மற்றும் 34 வயது எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

திருகோணமலை ஔவையார் வீதியில் கோகுலன் நிரஞ்சனா என்ற வைத்தியருடைய வீட்டில்  வேலைக்காக இருந்தபோது அவருடைய வீட்டில் இருந்த 4 இலட்சத்து 4000 ரூபாய் பணம் மற்றும் நகைகளை திருடியதாக தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார் கணவன் மற்றும் மனைவியை கைது செய்துள்ளதாகவும் கைது செய்து இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.