சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் : பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது -  டிலான்

Published By: R. Kalaichelvan

17 Dec, 2019 | 02:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புதிய அரசாங்கத்தை சர்வதேசத்தின் மத்தியில் நெருக்கடிக்குள்ளாக்கும் விதத்தில் முன்னெடுத்த சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் விவகாரம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

வெளிவிவகார கொள்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில்  பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்திற்கு இன்றுடன் ஒருமாதம் முழுமையடைந்துள்ளது.  குறுகிய காலத்திற்குள் நாட்டின் பிரதான துறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.

நகரை அழகுப்படுத்த வேண்டும் என்ற ஜனாதிபதியின் கொள்கைக்கு இன்று  இளம் தலைமுறையினர் பாரிய பலமாக செயற்படுகின்றார்கள்.புதிய அரசாங்கத்தை  சர்வதேசத்தின் மட்டத்தில் நெருக்கடிக்குள்ளாக்கும்  முகமான முன்னெடுக்கப்பட்ட சுவிஸ்லாந்து தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம் இன்று பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார கொள்கையில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையிலே  இக்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

 ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட   முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தற்போது  கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ளார். 

அவர் சுகயீனமடைந்துள்ளார். என்று அவரது  தரப்பினர் குறிப்பிடுகின்றார்கள்.  பலமான ஒரு  எதிர்க்கட்சியினையே நாங்கள்  தற்போது எதிர்பார்க்கின்றோம்.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொண்ட வெற்றியினை அடிப்படையாகக் கொண்டு பொதுத்தேர்தலிலும்  பெரும்பான்மையான  வாக்குகளுக்கும் அதிகமாகவே பெற்று பலமான அரசாங்கத்தை தோற்றுவிக்கும்.

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி   4 பிரிவான பிளவுப்பட்டு போட்டியிடும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01