அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் தென்மேற்குப் பகுதியில் இடம்பெற்ற கோடாரித் தாக்குதலினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு சர்ச்சையையடுத்து இருவர் கோடாரியினால் தாக்கப்பட்டுள்ளதாக 'Huntley Place' பொலிஸாருக்கு கிடைத்த அவசர அழைப்பினைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

இதன்போது ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் காணப்பட்டுள்ளனர். அவசர அம்பியூலன்ஸ் சேவை மூலம் சம்பவ இடத்திலேயே காயங்களுக்குள்ளான ஆணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பின்னர் காயங்களுக்குள்ளான பெண்னை லிவர்பூல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின்போது காயமடைந்த நிலையில் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.