சித்தாண்டியின் சந்தனமடு ஆற்றுப் பிரதேசத்தில் நடைபெறுகின்ற சட்ட விரோத மண் அகழ்வினால் மக்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர் நோக்குக்கின்றனர்.

பாதை மோசமாக பாதிக்கப்படுத்தல், ஆறு அகலமாக்கப்படுத்தல் , வெள்ள நீரினால் மக்கள் உயிர் ஆபத்தினை எதிர் கொள்ளுதல், உள்ளக மண் வளத்தினை உள்ளக தேவைக்குப்  பயன்படுத்த முடியாதென்று பல விதமான சவால்களுக்கு மக்கள் முகம் கொடுக்கின்றனர்.

இதனை எதிர்த்து பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன் தலைமையில் இன்று விவசாயிகள் , பொதுமக்கள் என்று பலர் கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன் போது மக்களால் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.