ஜப்­பானில் எதி­ர்வரும் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்­டி­களை நடத்­து­வ­தற்­காக கட்­டப்­பட்­டுள்ள பிர­மாண்ட மைதா­னத்தை அந்நாட்டின் பிர­தமர் ஷின்சோ அபே திறந்து வைத்­துள்ளார். 

ஜப்பான் தலை­நகர் டோக்­கி­யோவில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 24 முதல் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

இதற்­காக 68 ஆயிரம் பேர் அமர்ந்து போட்­டி­களைக் காணும் வகையில் சுமார் 1.25 பில்­லியன் டொலர் செலவில் பிர­மாண்ட மைதானம் கட்­டப்­பட்­டுள்­ளது. 

இந்த மைதா­னத்தை ஜப்பான் பிர­தமர் ஷின்சோ அபே நேற்­று­ முன்­தினம் திறந்து வைத்தார். 

நிகழ்ச்­சியில் பேசிய அபே, கட்­டு­ மா­னத்­தின்­போது பல்­வேறு பின்­ன­டைவுகளைச் சந்­தித்த போதிலும், திட்­ட­மிட்­ட­படி மைதானம் கட்­டப்­பட்­டி­ருப்­ப­தாக பாராட்டு தெரி­வித்தார். 

இந்த அரங்கில் ஆரம்ப விழா, நிறைவு விழா உட்பட தடகளப் போட்டிகளும் கால்பந்துப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.