முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளரும், சீ.எஸ்.என் தொலைக்காட்சி சேவையின் தலைவருமான ரொஹான் வெலிவிட்ட சிங்கப்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ப்ரோட்காஸ்ட் ஏசியா கண்காட்சியில் பங்கேற்பதற்காக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். 

எனினும் விமான நிலையத்தில் 3 மணித்தியாலங்களாக விசாரணைக்கு உட்படுத்திய சிங்கப்பூரின் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரை இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளனர்.