(எம்.மனோ­சித்ரா)

கண்­டி­யி­லி­ருந்து கொழும்பு ஊடாக களனி பாலத்­துக்கு உட்­புகும் இரு வழி­பா­தையில் ஒரு பாதையின் நிர்­மாணப் பணி­களின் பொருட்டு இன்று காலை 6 மணி­முதல் தற்­கா­லி­க­மாக இவ்­வீதி மூடப்­பட்டுள்ளதாக வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபையின் பணிப்­பாளர் தெரி­வித்­துள்ளார்.

வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபையின் பணிப்­பாளர் இது தொடர்பில் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது, இன்­றைய தினம் இப்­பா­தையில் பய­ணிக்கும் வாக­னங்­களை மட்­டுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­யினை இத்­திட்­டத்தின் முன்­னோடி பரீட்­சார்த்த நட­வ­டிக்­கையின் ஓர் அங்­க­மாக இன்று ஒரு வழி­காட்டி பாதையில் இலங்கை பொலிஸார் விசேட போக்­கு­வ­ரத்து திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ளனர்.

இத்­திட்­டத்­தி­லுள்ள குறை­பா­டு­களை ஆராய்ந்­ததன் பின்னர் நாளை மறு­தினம் வியா­ழக்­கி­ழமை (19) முதல் சனிக்­கி­ழமை (21) வரையில் நிர்­மாணப் பணி­க­ளுக்­காக இப்­பா­தையில் போக்­கு­வ­ரத்து நட­வ­டிக்­கைகள் ஒரு வழி பாதைக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­படும்.

இவ்­வீ­தியில் வாகன நெரி­சலை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக இன்று இலகு வாக­னங்கள் மற்றும் பேரூந்­துகள் கொழும்பு நோக்கி பய­ணிப்­ப­தற்­காக கொழும்பு - கட்­டு­நா­யக்க அதி­வேக பாதையின் பெலி­கொட இட­மா­றலை மாற்று பாதை­யாக உப­யோ­கிக்க முடியும்.

மேலும் பாரஊர்திகள் மற்றும் கனரக வாகனங்கள் கொழும்பு - நீர்கொழும்பு (ஏ03) வீதியை மாற்றுவழி பாதையாக உபயோகிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.