மன்னார் -நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது கணவரான நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றும் நிமால் (வயது-30) என்பவரே காணாமல் போயுள்ளதாக மனைவி நேற்று முந்தினம் சனிக்கிழமை இரவு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் ,
நறுவிலிக்குளத்தைச் சேர்ந்த அன்ரனிஸ் நிமால் நானாட்டான் பிரதேச சபையில் வெளிக்கள உத்தியோகத்தராக கடமையாற்றும் குறித்த குடும்பஸ்தர் கடந்த சனிக்கழமை (14) காலை 8 மணியளவில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார்.
இரவாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அன்று இரவு 11 மணியளவில் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் மனைவி முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார்.
எனினும் 2 நாட்கள் கடந்தும் இது வரை குறித்த நபர் வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இவ் விடையம் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது,
எவர் மீதும் சந்தேகம் கொள்ளும் படியான சம்பவங்கள் நடை பெறவில்லை. குடும்பப் பிரச்சனையும் இல்லை.
யாழ்ப்பாணம், வவுனியா, மற்றும் உள்ளுர் பொலிஸ் நிலையங்களுக்கு குறித்த நபர் தொடர்பான தகவல் கொடுக்கப்பட்டுள்ளதோடு விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதோடு, குறித்த நபரை தேடி வருவதாக முருங்கன் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM