(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவைப்படுகிறது. நான் தொடச்சியாக கட்சி தலைமைத்துவத்தில் இருக்கப் போவதில்லை. அவ்வாறு இருப்பதற்கான அவசியமும் இல்லை. எனவே அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணிப்பதற்கான திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று குருணாகல் மாவட்ட தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். 

நாம் முறையாக நேரடியாக களத்தில் இறங்கி பாடுபட்டால் எம்மால் சிறந்த பலனைப் பெற்றுக் கொள்ள முடியும். சிலர் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் எம்மால் வெற்றி பெற முடியாமல் போகும் என்று சிலர் பின்வாங்கியிருக்கின்றனர். அவ்வாறு பின்வாங்குபவர்களுக்கு நேரடியாக களத்தில் இறங்கி பாடுபட்டால் எம்மால் சிறந்த பலனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கூற விரும்புகின்றேன். 

அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒற்றுமையுடன் செயற்படாவிட்டால் சிறந்த பலனைப் பெற முடியாமல் போகும் என்றும் அவர் கூறினார்.