பொதுத்தேர்தலின் பின்னர் படுமோசமான ஊடக அடக்குமுறை உருவாகும் - ஐ.தே.க

By Vishnu

16 Dec, 2019 | 07:53 PM
image

(நா.தனுஜா)

தற்போது ஊடகநிறுவனங்கள் மீது பிரயோகிப்படும் அழுத்தங்களை விடவும் பொதுத்தேர்தலின் பின்னரே படுமோசமான நிலையொன்று உருவாகும் என ஐக்கிய தேசியக்  கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இன்று கொழும்பிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வாவும், எஸ்.எம். மரிக்காரும் மேற்கண்டவாறு கூறினர்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை நோக்குகையில், அவர்கள் விரும்பும் வகையிலேயே நாட்டின் சட்டம் வரையறுக்கப்பட்டிருப்பது போன்று தெரிகிறது. 

இவ்வரசாங்கம் ஆட்சிபீடமேறிய பின்னர் சில நாட்களிலேயே ஊடகவியலாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்களின் மீதும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகியிருக்கின்றன.

நாட்டின் தேசியத்துவத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஊடகவியலாளர்கள் முறையாக செயற்பட்டால் தாமும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதாகவும் ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் கடந்த ஒருமாதகாலத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம்...

2022-10-02 10:54:26
news-image

அரசாங்கத்தின் அமைச்சரவைக்கு முதலில் புனர்வாழ்வு அளியுங்கள்...

2022-10-02 10:53:50
news-image

கட்டணங்களை குறைக்கப்போவதில்லை - முச்சக்கர வண்டி...

2022-10-02 10:42:55
news-image

ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ...

2022-10-02 10:50:47
news-image

துப்பாக்கிச் சூட்டில் பஸ்ஸில் பயணித்த பெண்...

2022-10-02 10:01:52
news-image

இலங்கையின் புகழ்பெற்ற நடிகர் தர்சன் தர்மராஜ்...

2022-10-02 09:52:28
news-image

மக்கள் சார்பற்ற பொருளாதாரக் கொள்கையை நோக்கிப்...

2022-10-01 21:41:48
news-image

ஐ.நா.வில் 6 ஆம் திகதி இலங்கை...

2022-10-01 20:34:56
news-image

பயங்கரவாத தடைச்சட்டம் அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படுகின்றது...

2022-10-01 20:31:09
news-image

100 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கையில்...

2022-10-01 12:41:43
news-image

இலங்கை தொடர்பான புதிய பிரேரணை குறித்து...

2022-10-01 20:29:19
news-image

புனர்வாழ்வு பணியகங்களை ஸ்தாபிப்பது ஜனநாயகத்திற்கு முற்றிலும்...

2022-10-01 20:25:28