கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையில் கடற்சிங்கமொன்று (Sea lion) கரையொதுங்கி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.

அண்மைக் காலமாக கடற்சிங்கங்கள் இலங்கையின் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கிய வண்ணம் உள்ளன.

சீரற்ற வானிலை காரணமாக வேறு நாடுகளிலிருந்து திசைமாறி இவ்வாறு கரையொதுங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கரையொதுங்கிய இந்த கடற்சிங்கத்தை மக்கள் ஆர்வத்துடன் வந்து கண்டுகழிக்கின்றார்கள்.