ராஜித சேனாரத்ன அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தன்னை வெள்ளை வேன் சாரதியாக அறிமுகப்படுத்திக் கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கிருலப்பனை - ஹேவ்லொக் வீதியில் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தலைமையகத்தில் ராஜித சேனாரத்ன தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தபோதே இவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.