( மயூரன் )
புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டியவர்களுக்களான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் சந்தேக நபரின் தாயார் மாறுமொரு உறவினர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் கருப்பையா ஜீவராணி உத்தரவு இட்டுள்ளார்.
கடந்த மாதம் 4 ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தன்னை சந்தேக நபர்களின் உறவினர்கள் மிரட்டுவதாக புங்குடுதீவு மாணவியின் தாயார், நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு மாணவியின் தாயாருக்கு நீதிவான் அறிவுறுத்தி இருந்தார். அதன் பிரகாராம் தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யபப்பட்டது.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் மே மாதம் 18 ஆம் திகதி மாணவி கொலை வழக்கில் கைது செய்யபப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் சந்தேக நபரின் தாயார் மாறுமொரு உறவினர் ஆகியோரிடம் பொலிசார் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து மாணவியின் தாயாரை மிரட்டியவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களை வியாழக்கிழமை ஊர்காவற்துறை பொலிசார் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
அதனையடுத்து அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM