ஆளுமை மிக்க வீரராக பென்ஸ்டோக்ஸ்!

Published By: Vishnu

16 Dec, 2019 | 04:19 PM
image

பி.பி.சி. செய்திச் சேவை வழங்கிய 2019 ஆம் ஆண்டுக்கான ஆளுமை மிக்க விளையாட்டு வீரர் என்ற விருதை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்ட நாயகன் பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் ஆஷஸ் தொடர் போன்றவற்றில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியமைக்காவே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பென் ஸ்டோக்ஸ் நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரில் 5 அரை சதங்கள் உள்ளடங்கலாக மொத்தம் 465 ஓட்டங்களை குவித்தார். அவரது சராசரியும் 66.42 ஆக அமைந்தது.

அத்துடன் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியிலும் அவர் ஆட்டமிழக்காது, 84 ஓட்டங்களை குவித்து ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றார்.

ஆஷஸ் தொடரில் 2 சதம், 2 அரைசதம் உள்ளடங்கலாக மொத்தமாக 441 ஓட்டங்களை குவித்திருந்தார். அவரது சராசரியும் 55.12 ஆக அமைந்தது.

கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த விருதினை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அண்ட்ரூ பிளின்டொப் பெற்றதற்கு பின்னர் இந்த விருதை கிரிக்கெட் வீரரான பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார்.

கிரிக்கெட் உலகை பொருத்த வரை இந்த விருதினை இங்கிலாந்து அணியின் ஜிம் லெக்கர் (1956), டேவிட் ஸ்டீல் (1975), இயன் போத்தம் (1981) அண்ட்ரூ பிளின்டொப் (2005) ஆகியோர் பெற்றிருந்தனர்.

அத்துடன் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆண்டின் சிறந்த அணியாக பி.பி.சி.யினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59