ரணில் சஜித்­துக்கு காலை­வா­ர­வில்லை - அகிலவிராஸ் விசேட செவ்வி

16 Dec, 2019 | 01:40 PM
image

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரான ரணில் விக்­கிர­ம­சிங்க தனது அடுத்த கட்டச் செயற்­பா­டுகள் தொடர்­பி­லான தீர்­மா­னங்­களை விரைவில் அறி­விக்­க­வுள்ள நிலையில் அவரே அனைத்­தி­னங்­க­ளாலும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு தலை­வ­ராக இருக்­கின்றார் என்று  ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும், குருணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அகி­ல­விராஜ் காரி­ய­வசம் வீர­கே­சரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் தெரி­வித்தார்.

கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தலில் ஏற்­பட்ட பின்­ன­டை­வுகள் தொடர்பில் உங்­க­ளது கட்­சியின் ஆய்வு அறிக்­கையில் சிங்­கள பௌத்த, இளந்­த­லை­மு­றை­யி­னரின் வாக்­கு­களை பெறத்­த­வ­றி­ய­தாக கூறப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்பில் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை அடுத்த கட்­ட­மாக முன்­னெ­டுக்­க­வுள்­ளீர்கள்?
பதில்:- உண்­மை­யி­லேயே,  கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலை பார்த்­தீர்கள் என்றால் தென்­னி­லங்­கையில் அடிப்­ப­டை­வா­த சிந்­த­னை­களை மேலோங்கச் செய்யும் வகை­யி­லான நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுத்து அவற்றைப் பயன்­ப­டுத்தி பிர­சா­ரங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
குறிப்­பாக, தேசிய பாது­காப்பு, சிங்­கள தேசி­ய­வாதம், பௌத்த சமயம் ஆகி­ய­வற்றை முன்­னி­லைப்­ப­டுத்­தியே பிர­சா­ரங்கள் அமைந்­தி­ருந்தன. தர்­மத்­தை போதித்த பௌத்த சம­யத்­தினை தமது அர­சியல் இலா­பத்­துக்­காக பயன்­ப­டுத்­தி­யுள்­ளார்கள். மேலும் இரண்டு  பிம்­பங்­களை உரு­வாக்கி பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தார்கள். சிறு­பான்மை மக்­களை கவர்­வ­தற்­கான விட­யங்­களை ஒரு­பக்­கத்தில் கூறிக்­கொண்டு மறு­பக்­கத்தில் பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் அடிப்­ப­டை­வாத கருத்­து­ரு­வாக்­கத்­தி­னையே செய்­தனர்.
ஆனால், நாம் யதார்த்­த­மான விட­யங்­க­ளையே முன்­வைத்தோம். இனங்­களை ஏமாற்றும் வகையில் முன்­னுக்­குப்­பின்னர் முர­ணான வகையில் மாறு­பட்ட கருத்­துக்­களை நாம் முன்­வைக்­க­வில்லை. நாம் அனை­வரும் சமத்­து­வ­மாக இலங்­கை­யர்கள் என்ற அடை­யா­ளத்­துடன் இந்த தீவில் பாது­காப்­பாக வாழ வேண்டும் என்­ப­தையும் முன்­னோக்கிச் செல்ல வேண்டும் என்­பதையும் மையப்­ப­டுத்­தியே எமது விஞ்­ஞா­ப­னத்தில் பிர­தி­ப­லித்­தி­ருந்தோம்.
ஆகவே, பொது­மக்­களை ஏமாற்றி நாம் வாக்­கு­களை சுவீ­க­ரிப்­ப­தற்கு முய­ல ­வில்லை. துர­திர்ஷ்­ட­வ­ச­மாக எமது எதி­ர­ணி­யினர் அவ்­வாறு செய்­தார்கள். இந்­நி­லையில் எமது பின்­ன­டைவு குறித்த ஆய்வு அறிக்­கையில் நீங்கள் கூறிய விட­யங்கள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளன. அது­தொ­டர்பில் நாம் கவனம் செலுத்தி அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை எடுத்து பொதுத்­தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­பது பற்றி சிந்­திக்­கின்றோம்.
 

கேள்வி:-அப்­ப­டி­யென்றால் நீங்கள் கடும்­போக்­கான சிங்­கள பௌத்த நிலைப்­பா­டு­களை அடுத்து வரும் காலத்தில் பிர­தி­ப­லித்­தாக வேண்­டிய சூழ்­நி­லைக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளீர்­களா?
பதில்:- அவ்­வா­றில்லை. ஐக்­கிய தேசியக் கட்சியா­னது மூவின மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஜன­நா­யகம் நிறைந்­த­வொரு பாரம்­ப­ரிய அர­சியல் கட்­சி­யாகும். எமது கட்சித் தலை­மை­யி­லான கூட்­ட­ணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி உள்­ளிட்ட சிறு­பான்மை சமூ­கங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தரப்­புகள் உள்­ளன. அவர்கள் எமது கட்­சியின் மீதும், தலை­மையின் மீதும் வைத்­துள்ள இன­வா­த­மற்ற முற்­போக்­கான கொள்கை ரீதி­யான பிணைப்பின் கார­ணத்­தி­னாலும், நம்­பிக்­கை­யி­னா­லுமே எம்­முடன் இணைந்து பய­ணிக்­கின்­றார்கள். ஆகவே நாம் எப்­போதும் நடை­மு­றைச்­சாத்­தி­ய­மான யதார்த்­த­ பூர்­வ­மான விட­யங்­களை ஒளி­வு­ம­றை­வின்றி மக்கள் முன்­னி­லையில் கூறியே அவர்­களின் ஆணையைக் கோருவோம். இதில் எப்­போதும் மாற்­றுக்­க­ருத்­திற்கு இட­மில்லை.

கேள்வி:- எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ராக சஜித் பிரே­ம­தாஸ நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவ­ருக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மைப் ­பொ­றுப்­பினை வழங்­கு­மாறு வலு­வான கோரிக்­கைகள் எழுந்­துள்­ள­னவே?
பதில்:- ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் பல்­வேறு கருத்­துக்கள் கட்­சி­யினுள் எழுந்­தி­ருந்­தன. இந்­நி­லையில் பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் கூட்­டத்­திலும், ஐக்­கிய தேசியக் கட்­சியின் மத்­திய செயற்­குழு, பாரா­ளு­மன்றக் குழு ஆகிய கலந்­து­ரை­யா­டல்­க­ளிலும் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு அமை­வாக சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு எதிர்க்­கட்­சித்­த­லைவர் பதவி வழங்­கப்­ப­டு­வ­தற்­கான பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. அதே­போன்று அவ­ருக்கு அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பிர­தமர் வேட்­பாளர் பதவி வழங்­கு­வ­தற்கும் இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் கட்­சியின் தலை­வ­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க கட்­சியை மறு­சீ­ர­மைத்து, ஒற்­று­மை­யா­னதும், பல­மா­ன­து­மான அர­சியல் அணி­யாக உரு­வாக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளார். குறிப்­பாக, அடுத்த தலை­மைத்­துவம் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தலை முகங்­கொ­டுப்­ப­தற்­கான வியூங்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக குழு­வொன்­றையும் அமைத்­துள்ளார்.
அக்­கு­ழுவின் தீர்­மா­னங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே அடுத்த கட்ட செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. ஆகவே அக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளுடன் கட்­சியின் அனைத்துக் கட்­ட­மைப்­புக்­க­ளு­டனும் கலந்­து­ரை­யாடி கட்­சித்­த­லை­மைத்­துவம் சம்­பந்­த­மாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிறந்த தீர்­மா­ன­மொன்றை அறி­விப்பார். அச்­செ­யற்­பா­டுகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கேள்வி:- அடுத்து வரும் காலப்­ப­கு­தியில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தற்­போ­தைய தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு கட்­சியில் உள்ள வகி­பாகம் என்­ன­வாக இருக்­கப்­போ­கின்­றது?
பதில்:- அவரே தற்­போது கட்­சியின் தலை­வ­ராக இருக்­கின்றார். அடுத்து வரும் காலத்தில் கட்­சி­யினுள் எத்­த­கைய மாற்­றங்கள் இடம்­பெறும் என்­பதை ஆராய்ந்து கொண்­டி­ருக்­கின்றோம். குறிப்­பாக கட்­சியின் தலைவர் என்ற வகையில் அடுத்த கட்­ட­மான விட­யங்­களை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்பில் அவரே முடி­வெ­டுக்­க­வுள்ளார். அது­பற்றி தற்­போது அவ­சரப்­பட வேண்­டி­ய­தில்லை. அவர் உரிய நேரத்தில் முடி­வு­களை அறி­விப்பார்.


கேள்வி:- உங்­க­ளது கட்­சி­யினுள் ரணில், சஜித் அணி­க­ளாக பிள­வு­பட்­டுள்ள நிலையில் சஜித் ஆத­ரவு தரப்­பினர் கட்சித் தலை­மைத்­து­வத்­தி­னை  கோரி­வ­ரு­கின்­றனர். இந்­நி­லையில் அவர்­களின் கோரிக்­கைக்கு சாத­க­மற்­ற­தொரு சூழல் ஏற்­பட்டால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஐக்­கியம் கேள்­விக்­கு­றி­யா­கி­வி­டு­மல்­லவா?
பதில்:- ஐக்­கிய தேசியக் கட்­சி­யினுள் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அணி­யினர், சஜித் பிரே­ம­தாஸ அணி­யினர் என்று இரு தரப்­பினர் இருக்­கின்­றார்கள் என்­பதை என்னால் உறு­தி­யாக கூற முடி­யாது. ஆனால் எமது கட்­சி­யினுள் வெவ்வேறு­பட்ட நிலைப்­பா­டு­களைக் கொண்­ட­வர்கள் உள்­ளார்கள். ஜன­நா­யகத் தன்மை கொண்ட அர­சியல் கட்சி என்ற வகையில் அனை­வரின் கருத்­துக்­க­ளையும் நாம் செவி­ம­டுத்தே தற்­போது வரையில் செயற்­பட்­டு­வந்து கொண்­டி­ருக்­கின்றோம்.
மேலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினுள் காணப்­படும் மாறு­பட்ட நிலைப்­பா­டு­களைக் களைந்து ஐக்­கி­யப்­பட்­டாலே எம்மால் அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் 113ஆச­னங்­களைப் பெற­மு­டியும் அல்­லது அந்த ஆசன எண்­ணிக்­கைக்கு அரு­கி­லா­வது வர­மு­டியும். அவ்­வா­றான ஆசன எண்­ணிக்­கையை எட்­டு­மி­டத்து எம்மால் பாரா­ளு­மன்ற அதி­கா­ரத்­தினை ஏனைய தரப்­புக்­க­ளையும் இணைத்து பெற்­றுக்­கொள்ள முடியும்.  இந்த யதார்த்த நிலை­மையை அனை­வரும் புரிந்­து­கொள்ள வேண்டும். எமது கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்தி அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து பய­ணிப்­பதே எமது இலக்­கா­க­வுள்­ளது.  
நாம் ஒற்­று­மை­யாக செயற்­பட்­டதன் கார­ணத்­தி­னா­லேயே 2015ஆம் ஆண்டு ஜன­வரி 8இல் ராஜ­ப­க் ஷ ­வினரின் ஆட்­சியை முடி­வுக்கு கொண்­டு­வர முடிந்­தது. அந்த முன் அனு­ப­வத்­தினை மையப்­ப­டுத்தி எமது நிலைப்­பா­டு­களை வெளிப்­ப­டுத்த வேண்டும். நபர்­களை மையப்­ப­டுத்தி விமர்­ச­னங்­களை முன்­வைப்­பதால் மென்­மேலும் இடை­வெ­ளி­களே அதி­க­ரித்துச் செல்லும் நிலை­மை­களே உரு­வாகும். இதனால் நன்­மை­ய­டைப்­போ­வது யார் என்­ப­தையும் மனதில் நிலை­நி­றுத்திக் கொள்ள வேண்டும்.

கேள்வி:- சஜித் பிரே­ம­தா­ஸவை தோல்வியடை­யச் ­செய்­வ­தற்கு கட்­சி­யினுள் சூழ்ச்சி செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வது பற்றி?
பதில்:- கட்­சியின் பெரும்­பான்­மை­யா­ன­வர்­களின் தீர்­மா­னத்­திற்கு அமை­யவே வேட்­பாளர் தெரிவு உள்­ளிட்ட அனைத்து விட­யங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. மேலும் எமது உறுப்­பி­னர்­களும், பங்­கா­ளிக்­கட்­சி­களும் அவரின் வெற்­றிக்­காக அர்ப்­ப­ணிப்­பு­ட­னான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள். ஆகவே பின்ன­டை­வு­களின் பின்னர் கட்­சி­யினுள் ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே அவ்­வா­றான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.


கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உட்­பட சிறு­பான்மைக் கட்­சிகள் உங்­களின் தரப்­புடன் கைகோர்த்­தமை தென்­னி­லங்­கையில் பின்­ன­டை­வு­களை சந்­திப்­ப­தற்கு கார­ண­மா­கி­யி­ருந்­தது என்று கரு­து­கின்­றீர்­களா?
பதில்:- இல்லை. நாம் இந்த தரப்­பி­ன­ருடன் இணைந்தே 2015 இல் தேர்தல் வெற்­றியைப் பெற்­றி­ருந்தோம். அப்­போது தென்­னி­லங்­கையில் மக்கள் எமக்கு ஆணை வழங்­கி­யி­ருந்­தார்கள். ஆகவே அவ்­வா­றா­ன­தொரு கருத்­தினை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. எமக்கு எதி­ராக ஊடக மாபியாக்
கும்­பலைப் பயன்­ப­டுத்தி முழுக்க முழுக்க மேற்­கொள்­ளப்­பட்ட இன­வாதம் நிறைந்த விஷ­மப்­பி­ர­சா­ரமே கார­ண­மாக அமை­கின்­றது. அதன் கார­ண­மாக வெற்­றி­யொன்றை ஒரு­த­ரப்பு பெற்­ற­மையும் மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மா­கின்­றது. எதிர்­கா­லத்தில் இந்த நாட்டின் மக்கள் ஒவ்­வொரு விட­யத்­தி­னையும் ஆழ­மாக அவ­தா­னித்து தமது தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யா­க­வுள்­ளது.

கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ராக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் மலை­யக பகு­தி­க­ளுக்­கான பிர­சா­ரப்­ப­ணி­களே ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­த­தோடு, அவர் அதனை முறை­யாக முன்­னெ­டுத்­துள்­ள­மையும் தேர்தல் முடி­வுகள் வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­றன. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் அவரை கட்­சித்­த­லை­மை­யி­லி­ருந்து விலக வேண்டும் என்று வலி­யு­றுத்­து­வ­தா­னது எவ்­வ­ளவு தூரம் நியா­ய­மா­னது என்று கரு­து­கின்­றீர்கள்
பதில்:- உங்­களின் கேள்வி நியா­ய­மா­னதே. இந்த நாட்டில் உள்ள தற்­பே­தைய அர­சியல் தலை­வர்­களில் அனைத்து இன மக்­க­ளாலும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய ஒரு தலை­வ­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே இருக்­கின்றார். கட்­சி­யினுள் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தின் பிர­காரம் அவர் அர்ப்­ப­ணிப்­புடன் தேர்தல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்தார். வடக்கு, கிழக்கு, மலை­யகம் ஆகிய பகு­தி­க­ளுக்கு சென்று நேர­டி­யாக பிர­சா­ரப்­ப­ணிகளில் ஈடு­பட்டார். சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு அவர் காலை­வா­ரி­வி­ட­வில்லை. மேலும் அவரை தலை­மைப்­ப­த­வியில் இருந்து விலக வேண்டும் என்று கோரித்­தி­ரி­ப­வர்கள் அவர்­களின் தொகு­தி­களில் ஏற்­பட்ட பின்­ன­டை­வு­க­ளையும் ஒரு­த­டவை சுய­ப­ரி­சீ­லனை செய்து பார்க்க வேண்டும்.

கேள்வி:- அப்­ப­டி­யாயின் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தலை­மைப்­ப­த­வியில் இருந்து விலக வேண்டும் என்று கோரு­ப­வர்­க­ளி­டத்தில் இந்த விடயம் பற்றி கலந்­து­ரை­யா­டி­னீர்­களா?
பதில்:- தேர்­தலின் பின்னர் நடை­பெற்ற எமது கட்­சிக்­கூட்­டங்­களின் போது சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் இந்த விட­யங்கள் சம்­பந்­த­மாக எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர். ஆனால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினை தலை­மைப்­ப­த­வி­யி­லி­ருந்து விலக வேண்டும் என்று கோரும் தரப்­பினர் அந்­தக்­க­ருத்­துக்­க­ளுக்கு செவி சாய்ப்­ப­தாக இல்லை. அவர்கள் வேறொரு நிகழ்ச்சி நிரலில் செயற்­ப­டு­வதன் கார­ணத்­தாலோ அல்­லது அடுத்த தேர்­தலில் தமது வெற்­றியை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவோ வேண்­டியே நியா­ய­மான கருத்­துக்கள் அனைத்­தையும் நிரா­க­ரித்து செயற்­பட விழை­கின்­றார்கள்.

கேள்வி:- எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க போட்­டி­யி­டு­வாரா?
பதில்:- அது­பற்றி எவ்­வி­த­மான கருத்­துக்­க­ளையும்  அவர் இது­வ­ரையில் பகிர்ந்­தி­ருக்­க­வில்லை. ஆகவே அது­பற்றிய கருத்­துக்­களை என்னால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கூற­மு­டி­யாது.
கேள்வி:- ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்­த­கட்­ட­மாக ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பதவி நோக்கி நக­ர­வுள்­ள­தாக வெளி­யான தக­வல்­களில் உண்­மைத்­தன்­மைகள் இருக்­கின்­ற­னவா?
பதில்:- இல்லை. அவ்­வா­றான எந்­த­வி­த­மான விட­யங்­களும் நடை­பெற வில்லை. அவை­யெல்லாம் திட்­ட­மிட்டு பரப்­பப்­பட்டு வரும் வதந்­தி­களே.


கேள்வி:- புதிய ஆட்­சி­யா­ளர்­களின் செயற்­பா­டு­களை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?
பதில்:- புதிய ஜனா­தி­பதி ஒரு­சில நல்ல விட­யங்­களை முன்­னெ­டுக்­கின்றார். ஆனாலும் கடந்த காலத்தில் ஒரு குடும்­பத்­தினை மையப்­ப­டுத்­தி­ய­தாக முன்­னெ­டுக்­கப்­பட்ட செயற்­பா­டுகள் மெல்ல மெல்ல ஆரம்­ப­மா­கின்­றன. ஜன­நா­யகச் செயற்­பா­டுகள் தொடர்பில்  விமர்­ச­னங்கள் உள்­ளன. இரா­ஜ­தந்­திர தரப்­புக்கள் அதி­ருப்தி அடையும் வகை­யி­லான செயற்பாடுகள் ஆட்சி அதிகாரத்தினை பொறுப்பேற்று சொற்ப காலத்திலேயே அரங்கேறியுள்ளது.
இவற்றை விட எம்.சி.சி.ஒப்பந்தம் மூலமாக அமெரிக்காவுக்கு நாட்டை தாரைவார்த்து நாம் கொடுக்கப்போகின்றோம் என்று பிரசாரம் செய்தவர்கள். தற்போது 70சதவீதம் நாட்டுக்கு நன்மையான விடயங்கள் இருப்பதாக பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இதன்மூலம் பொய்யான பிரசாரங்கள் ஊடாகவே ஆட்சியை கைப்பற்றியுள்ளார்கள் என்பது வெளிப்படையாகியுள்ளது.

கேள்வி:- ஒக்டோபர் புரட்சியின்போது ஜனநாயகத்தையும், அரசியல் சம்பிரதாயங்களையும் நிலைநாட்டுவதற்காக உயர்நீதிமன்றத்தினை நாடியிருந்த உங்களுடைய கட்சி தற்போது பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அமைச்சுக்களை ஜனாதிபதி வைத்திருப்பதால் அரசியலமைப்பு மீறப்படுவதாக கூறுகின்றபோது அதுகுறித்து நடவடிக்கைகளை எடுக்காதிருப்பது ஏன்?

பதில்:- 19ஆவது திருத்தச்சட்டத்தின் மூலமாகவே இந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் கட்டியெழுப்பப்பட்டு ஜனநாயக முறையிலான ஆட்சியொன்று முன்னெடுக்கப்பட்டது. ஆகவே அந்த சட்டத்தினை நீக்குவதற்கோ மீறப்படுவதற்கோ நாம் இடமளிக்கப்போவதில்லை. ஆகவே அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தினை மீறும் வகையிலான அரசின் செயற்பாடுகள் குறித்து நாம் கட்சி மட்டத்தில் ஆராய்ந்து வருகின்றோம். சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து விரைந்து முடிவெடுப்போம்.


கேள்வி:- கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதியொருவரின் நெருக்கமான உறவினர் என்று கூறப்படுகின்றதே?


பதில்:- அது முற்றிலும் பொய்யான கருத்தாகும். அரசாங்கம் தன்மீது விழுந்த கரும்புள்ளியை நீக்குவதற்கு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கின்றது.

நேர்காணல் - ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48