“மலையக சிறகுகள்” கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

Published By: Digital Desk 4

16 Dec, 2019 | 01:35 PM
image

“மலையக சிறகுகள்” கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வெகு விமர்சையாக மஸ்கெலியா  பொது விளையாட்டரங்கில்  நடைபெற்று முடிவடைந்தது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் பொது  செயலாளர்  ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய  இலங்கை  தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் பிரிவு மற்றும் மஸ்கெலியா பிரதேச சபை தலைவர். ஜி.செண்பகவல்லியின் பூரண அனுசரணையுடன்  “மலையக சிறகுகள்” கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வெகு விமர்சையாக மஸ்கெலியா   பொது விளையாட்டரங்கில்  நடைபெற்று முடிவடைந்தது. 

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக  இ.தொ.கா தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்கமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்  கலந்து கொண்டு சிறப்பித்தார். 

சிறப்பு அதிதிகளாக முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ராமேஸ்வரன், முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய பிரதேச  சபை தலைவர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

மஸ்கெலியா மற்றும் சாமிமலை  பகுதிகளை பிரதிநிதித்துவபடுத்தி 16 அணிகள் பங்குபற்றிய இப்போட்டிகளில் முதல் பரிசான ரூபா 50,000/- பண பரிசையும்,  கேடயத்தினையும் சாமிமலை மஹானிலு அணியினரும்,  

இரண்டாவது பரிசான ரூபா 25,000/- பண பரிசையும் கேடயத்தையும்  மஸ்கெலியா வளதலை அணியினரும், மூன்றாவது பரிசான ரூபா 15,000/- பண பரிசையும்  கேடயத்தையும், சாமிமலை ஸ்டொக்கம் அணியினரும் பெற்றுக்கொண்டனர்.

அத்தோடு,  வெற்றிபெற்ற அணியின் வீரர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35