இனவாதத்தை தமக்குள் ஏற்படுத்தும் நிலைமையை சிறுபான்மை மக்கள் தவிர்ப்பது மிக அவசியமானது

Published By: Digital Desk 3

16 Dec, 2019 | 02:57 PM
image

நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அடிப்படைவாத அரசியல் தார்ப்பரியங்களை புரிந்துகொள்ளாமல் சிறுபான்மை சமூகங்கள் தமக்குள் இனவாதத்தைத் தூண்டும் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்வது ஆரோக்கியமான நடைமுறையல்ல, தற்போது கிழக்கில் இத்தகையதொரு கொதிநிலை காணப்படுகின்றது. இதன் பின்புலம் குறித்து சிறுபான்மை சமூகங்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருமான நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

தமிழ், முஸ்லிம் மக்கள் காலம் காலமாகக் கிழக்கில் மிக அன்னியோன்னியமாக ஒருதாய் பிள்ளைகள் போன்று வாழ்ந்து வந்தனர், வருகின்றனர். இந்நிலையில் இதனை குழப்பி அடித்து அவர்களுக்கு மத்தியில் வேற்றுமைகளை உருவாக்கி அதன் மூலமாக அரசியல் பிரிவினைகளை ஏற்படுத்தி தத்தமது சுயலாபங்களுக்கான வழிமுறைகளை திறக்க சிலர் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றனர். குறிப்பாக இவர்கள் தற்போதைய அரசுக்கு ஆதரவளிப்பவர்களாக இருப்பதும் வெள்ளிடைமலை.

இந்த நிலைமையானது சிறுபான்மை சமூகங்களில் இருப்புக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பது போல் பேரினவாதச் சக்திகளும் இதற்குத் தூப மிட்டு வருகின்றன. எனவே இத்தகைய சக்திகளின் சிந்தனைகளுக்கு நாம் உயிரூட்டாமல் எமது ஒற்றுமையை வலுப்படுத்த திடசங்கற்பம் கொள்ளவேண்டும்.

பிரித்தாளுதல் என்பது அரசியல் சாதுரியத்தின் உச்சகட்ட வழிநிலையாகும். இதனைக் கைக்கொள்வதில் பேரினவாதிகள் சமார்த்தியசாலிகளாக இருக்கின்றனர். அவர்களது இந்த அணுகுமுறைதான் நாட்டில் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வழிவகுத்தன. இதுவே இன்று சிறுபான்மை சமூகங்களுக்கு பெரும் பின்னடைவுகள் ஏற்படக் காரணமாகவும் உள்ளன.

இவற்றையெல்லாம் சரிவர புரிந்து கொள்ளாத அரசியல் தலைமைகள் சிலர் இவற்றுக்கு தற்போதும் துணைபோகத் தலைப்படுகின்றன. இது காத்திரமான நடைமுறையல்ல எனவே சிறுபான்மை சமூகங்கள் தமது ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் வளர்த்துக் கொண்டு சமாதானத்தை மேம்படுத்த முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்பும் அதேவேளை, தொடர்ந்தும் பிரித்தாளும் ஏற்பாடுகளுக்கு துணை போகாதீர் என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன்  என்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13