தமி­ழர்­களின் மனங்­களை வெல்ல விசேட அமைச்சு: விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்­கிறார் விஜே­தாச..!

Published By: J.G.Stephan

16 Dec, 2019 | 11:37 AM
image

(ரொபட் அன்­டனி) 

ஜனா­தி­ப­தியும் இந்த விட­யத்தை உணர்ந்­துள்ளார். தமிழ் மக்­களின் மனங்­களை வெல்ல அவர்­களின் அபி­மா­னத்தை காப்­பாற்­று­வது அவ­சியம். கூட்­ட­மைப்­புடன் பேசு­வதில் அர்த்­த­மில்லை

நாட்டில் தமிழ் பேசும் மக்­களின்  மனங்­களை வெல்லும் வகை­யிலும்  அவர்­களின் அபி­மா­னத்தை பாது­காக்கும் வகை­யிலும்  செயற்­பட ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ விசேட வேலைத்­திட்டமொன்றை அர­சாங்­கத்தின் ஊடாக முன்­னெ­டுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

என்று ஆளும் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி விஜே­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.  

இதற்­காக தனி­யான ஒரு அமைச்சை உரு­வாக்­க­வே­ணடும்.  தமிழ் பேசும் அர­சி­யல்­வா­தி­களை அன்றி மக்­களை   இணைத்­துக்­கொண்டு இந்த வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­க­வேண்டும். அந்த பொறுப்பை என்­னிடம் வழங்­கினால் அதனை நான் சிறப்­பாக வழி நடத்தி வடக்­கையும் தெற்­கையும் இணைப்பேன் என்றும் விஜே­ச­தாச ராஜ­பக்ஷ குறிப்­பிட்டார். 

நாட்டின் தமிழ் பேசும் மக்­களின் மனங்­களை வெல்­வாற்கு ஜனா­தி­ப­திக்கு  இன்னும் அவ­காசம் உள்­ளது.  யுத்தம் முடிந்­ததும்   அப்­போ­தைய ஜனா­தி­பதி  அபி­வி­ருத்­திக்கு முக­கி­யத்­துவம் அளித்தார். ஆனால் அத­னூ­டாக  தமிழ் மக்­களின் மனங்­களை வெல்ல முடி­ய­வில்லை.  இதனை உணர்ந்து நாம் அந்த மக்­களின் அபி­மா­னத்தை பாது­காக்க முன்­வ­ர­வேண்­டி­யது முக்­கி­ய­மாகும் என்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  விஜே­ச­தாச ராஜ­பக்ஷ  சுட்­டிக்­காட்­டினார். 

புதிய அர­சாங்­கத்தின் நகர்­வுகள்  தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான வேலைத்­திட்­டங்கள் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் அடுத்தக் கூட்டத் தொடர் உள­ளிட்ட விட­யங்கள் குறித்து கேச­ரியுன் கருத்துப் பகிர்­கை­யி­லேயே  அவர்  இதனை குறிப்­பிட்டார். 

விஜே­தாச ராஜ­பக்ஷ இந்த விடயம் தொடர்பில் அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில் 

நாட்டின்  தமிழ் பேசும் மக்­களின் மனங்­களை நாங்கள் வெல்­ல­வேண்­டி­யுள்­ளது.   அதற்­காக  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வதில் அர்த்­த­மில்லை.  

காரணம் தமிழ்க் கூட்­ட­மைப்­பி­னரும்  புலம்­பெயர் தமிழ் மக்­களும்  ஒரு­போதும் தமிழ் மக்­களின் நல­னுக்­காக செயற்­ப­ட­வில்லை.  மாறாக  அவர்கள் தங்­களின்  நல­னுக்­கா­கவே  கடந்த காலங்­களில் செயற்­பட்­டனர். 

நாம்  நேர­டி­யாக  தமிழ் மக்­க­ளுடன்  ஈடு­பாட்­டுடன்  செயற்­ப­டு­வ­தற்­கான  ஒரு வழியை  புதிய அர­சா­ஙகம் ஏற்­ப­டு­த­திக்­கொள்­வது  அவ­சி­ய­மாகும்.  தற்­போது ஜனா­தி­பதி கோத்­த­பாய தலை­மையில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள  அர­சாங்கம்  மக்­களின் மனதை வெல்லும் வகையில்  செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. 

எனவே தமிழ் மக்­களின் மனங்­களை வெல்லும்  வகையில் அர­சாங்கம்  ஏதா­வது விசேட வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வேண்­டிய தேவை உள்­ளது. 

அதா­வது  தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் என்ன? அவர்­களின் உணர்வு என்ன?  தமிழ் மக்­களின் அபி­மா­னத்தை எவ்­வாறு காப்­பாற்­று­வது ? போன்ற  பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆராய விசேட  வேலைத்­திட்டம் ஒன்றை  ஜனா­தி­பதி  தலை­மை­யி­லான அர­சாங்கம் முன்­னெ­டுப்­பது அவ­சி­ய­மா­கின்­றது. 

விசே­ட­மாக இதற்­காக  தனி ஒரு அமைச்சை உரு­வாக்­க­வேண்டும்.  அத­னூ­டா­கவே இந்த வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மா­கின்­றது. வடக்­கையும்  தெற்­கையும் இணைக்­க­வேண்டும்.  தமிழ் மக்­களும்  சிங்­கள மக்­களும்  முன்னர்  இணைந்து ஈடு­பாட்­டுடன் செயற்­பட்­டுள்­ளனர். எனினும் 1978 ஆம் ஆண்டின் பின்­னரே நிலைமை மாற்­ற­ம­டைந்­தது.  

எனவே  மீணடும்  இரண்டு சமூ­கங்­களும் இணைந்து புரிந்­து­ணர்­வுடன் பணி­யாற்றும் சூழல் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அது கடி­ன­மா­ன­தல்ல. அது­வொரு சாத்­தி­ய­மான விட­ய­மாகும். ஆனால் தமிழ் மக்­க­ளுடன் நேர­டி­யாக  அர­சா­ஙகம் ஈடு­ப­ட­வேண்டும்.  அதற்­கா­கவே   இந்த விட­ய­தா­னத்­துக்­காக தனித்த அமைச்சை உரு­வாக்­கு­வது சிறந்­த­தாக இருக்கும் என்று கரு­து­கின்றேன். 

தன்­னுடன் தமிழ் பேசும் மக்­களை அர­வ­ணைத்துச் செல்­ல­வேண்டும் என்று  ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ கரு­து­கின்றார். அதற்கு அவ­ருக்கு இவ்­வா­றான ஒரு திட்டம்  தேவைப்­ப­டு­கின்­றது. அதனை  முன்­னின்று கொண்­டு­செல்ல  நான் தயா­ராக இருக்­கின்றேன். அந்த பொறுப்பை என்­னிடம் தந்தால் நான் அதனை சிறப்­பாக வழி நடத்தி செய்து முடிப்பேன். வடக்­கையும் தெற்­கையும் இணைப்பேன். 

இவ்­வா­றான ஒரு  விசேட வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்தால்   ஒரு வருட காலத்தில்  தமிழ் தேசிய பிரச்­சி­னைக்கும் தீர்வைக் காணலாம். முதலில் மக்­களின் மனதை வெல்­ல­வேண்டும்.  அதனை  கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் ஊடா­கவோ அல்­லது  புலம்­பெயர் மக்கள் ஊடா­கவோ முன்­னெ­டுக்க முடி­யாது. காரணம் அவர்­களின் நிகழ்ச்சி நிரல் வேறாகும். மாறாக  இந்த செயற்­பாட்டை நேர­டி­யாக தமிழ் மக்­க­ளுடன்   ஈடு­பாட்­டுடன் பணி­யாற்­று­வதன் மூலமே செய்ய முடியும். 

தமிழ் மக்­களின் அபி­மா­னத்தை  நாம் ஏற்­க­வேண்டும்.  அதற்­கான  வேலைத்­திட்­டமே  முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மா­கின்­றது. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்­ததும் அப்போதைய ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்தார். அப்போதைய சூழலில்  அது தேவையாக இருந்தது. எனினும்  தமிழ்  மக்கள்  அதனால் திருப்தியடையவில்லை.    எனவே நாம் அந்த மக்களின் அபிமானம் குறித்து பேசவேண்டும்.  தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறி்த்து இவ்வாறு விசேட வேலைத்திட்டத்தின் ஊடாக பயணித்தால் முஸ்லிம் மக்களும் எம்முடன் இணைவார்கள்.  இவ்வாறு செயற்படுவதன் ஊடாக  மட்டுமே  நாம்  அடுத்த கட்டம் நோக்கி பயணிக்க முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து...

2024-10-05 17:21:24
news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30
news-image

குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள்...

2024-10-05 17:29:49
news-image

சிறையிலுள்ள கணவனுக்கு தேங்காய் சம்பலில் போதைப்பொருளை...

2024-10-05 16:00:33
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக கேஸ்...

2024-10-05 15:37:37
news-image

பியூமி ஹன்சமாலியின் சொகுசு வாகனம் தொடர்பில்...

2024-10-05 16:24:12
news-image

தம்புள்ளையில் அனுமதிப்பத்திரமின்றி இறைச்சி விற்பனை செய்தவர்...

2024-10-05 15:46:39
news-image

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர்...

2024-10-05 15:18:19