(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தனக்கு தெரிவிக்குமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சட்டப்பிரிவின் பிரதானி திலக் மாரப்பனவுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறார். 

பலமானதொரு கட்சியாக ஐக்கிய தேசிய கட்சியை வலுப்படுத்துவதற்காகவே கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் திருத்தங்களை சமர்பிக்குமாறு இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அவர் கட்சி தலைமைத்துவத்தின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் திலக் மாரப்பனவிற்கு பணிப்புரை விடுத்திருப்பதோடு, வெகு விரைவில் திருத்தங்களை சமர்பிக்குமாறும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.