தெஹியத்தகண்டிய - தொலகந்த பகுதியில் மண்வெட்டியால் தாக்கி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு சிறுமி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 35 வயதுடை பெண் உயிரிழந்துள்ளதுடன் 9 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைத செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.