பிலிப்பைன்ஸின், டாவோ நகரத்திற்கு அருகேயுள்ள மிண்டானாவோ ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக ஆறு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் இந்த நிலநடுக்கம் காரணாக கட்டடங்களும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கமானது இன்று டாவோ நகரின் தென் மேற்கில் 56 கிலோ மீற்றர் தொலைவே, 53 கிலோ மீற்றர் ஆழத்திலேயே இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை.

குறித்த பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்படத்தக்கது.