(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் மற்றும் சபைமுதல்வர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களை நாளைமறுதினம் இடம்பெறும் பொதுஜன பெரமுன கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட இருப்பதாக தெரியவருகின்றது. 

குறித்த பதவிகளுக்கான உறுப்பினர்களை பொதுஜன பெரமுன கட்சி கூட்டத்தில் தெரிவு செய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் கடந்தவாரம் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின்போது தெரிவித்திருந்தார்.

அதன் பிரகாரம் பொதுஜன பெரமுன கட்சி தலைவர்களின் கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் கொழும்பு விஜேயராம மாவத்தையில் அமைந்திருக்கும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நாளைமறுதினம் மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.