நாட்டில் முடங்கியுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான செயற்றிட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது முன்னைய ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள் அனைத்தும் கடந்த ஐ.தே.க அரசாங்கத்தினால் கைவிடப்பட்டதாக  கூறிய பிரதமர் மஹிந்த, தடைப்பட்ட அந்த அபிவிருத்தி பணிகளை மீண்டும் ஆரம்பிக்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளார்.

நேற்றிரவு தங்காலை வனவாச விஹாரையில் இடம்பெற்ற சமய வழிப்பாடுகளில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.