ஆர்.ராம்

வெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளி­டத்தில் பக்­கச்­சார்­பான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு முழு­மை­யான விட­யங்கள் வெளிக்­கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

புதிய ஆட்­சி­யா­ளர்கள் வெள்­ளைவேன் விவ­காரம் தொடர்பில் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணைகள் உள்­ளிட்ட செயற்­பா­டு­க­ளுக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் வழங்­கு­வ­தற்கு தயா­ராக உள்­ள­தா­கவும் அவர் அறி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெ­று­வ­தற்கு சொற்ப நாட்­க­ளுக்கு முன்­ன­தாக  ராஜித சேனா­ரத்ன நடத்­திய  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் வெள்­ளைவேன்  கடத்­தல்கள் மற்றும் மனி­தப்­ப­டு­கொ­லைகள் இடம்­பெற்று முத­லை­க­ளுக்கு போடப்­பட்­டமை தொடர்பில் தக­வல்­களை வெள்­ளை­வேனில் சார­தி­யாக பணி­யாற்­றி­ய­தாக கூறி தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திய இருவர் வெளி­யிட்­டி­ருந்­தனர்.  இந்­நி­லையில் குறித்த இரு­வ­ரையும் கைது செய்து குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரி­வினர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி வரு­கின்­றனர். 

இந்­நி­லையில் அவர்­களின் கைது தொடர்பில் கருத்து வெளி­யிட்ட ராஜித சேனா­ரத்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். 

அத்­துடன்,  அவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில், 2015ஆம் ஆண்­டுக்கு முன்­ன­ரான காலத்தில் ஜன­நா­யகம் மறு­த­லிக்­கப்­பட்ட ஆட்­சிக்­கா­லத்தில் வெள்­ளைவேன் கலா­சாரம் அறி­மு­க­மா­னது. 

இந்­தக்­க­லா­சாரம் நடை­மு­றையில் இருந்த காலத்தில் பலர் கடத்­தப்­பட்டு காணா­ம­லாக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் முறைப்­பா­டுகள் உள்­ளன. அவை தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போதும் அவை முற்­றுப்­பெற்­றி­ருக்­க­வில்லை. மேலும் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் பலரும் என்­னி­டத்தில் நேர­டி­யா­கவும் முறைப்­பா­டு­களை தெரி­வித்­தி­ருந்­தனர். 

இந்­நி­லையில் தான் குறித்த இரு­ந­பர்­களும் வெள்­ளைவேன்  கடத்­தல்கள் தொடர்­பி­லான விட­யங்­களை பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தற்கு முன்­வந்­தி­ருந்­தனர். குறித்த நபர்­க­ளி­டத்தில் நான் அதற்­கான சாட்­சிகள் இருக்­கின்­றவா என்­பது உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து கேட்­டி­ருந்தேன். 

அந்த இரண்டு நபர்­களும் நேர­டி­யாக சட்­சி­யத்­தினைக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் மற்றும் சில  ஆவ­ணங்­க­ளையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். இந்­நி­லையில் தான் வெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்த தக­வல்­களை அவர்கள் மூல­மாக நான் பங்­கேற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் ஊடாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தேன். 

மேலும் அவர்கள் தமக்­கான பாது­காப்­பினை வழங்­கு­மாறும் கோரி­யி­ருந்­தார்கள். இந்­நி­லையில் குறித்த விடயம் சம்­பந்­த­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு பொலி­ஸா­ரி­டத்தில் நானே கோரி­ய­தோடு உரி­ய­வர்­க­ளுக்கு பாது­காப்­பினை வழங்­கு­மாறும் கோரி­யி­ருந்தேன். 

தற்­போது அவர்கள் இரு­வ­ரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். அவர்களிடத்தில் உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி முன்னெடுக்க வேண்டும். அவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்படுவது அவசியம் என்பதோடு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நான் தயாராகவும் இருக்கின்றேன் என்றார்.