வவுனியா பறயனாளங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்நாட்டி கணேசபுரம் பகுதியில் யானையும் யானைகுட்டியும் உருக்குலைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளதை ஊர்வாசிகள் அவதானித்துள்ளனர். 

கல்நாட்டி பகுதியில் அமைந்துள்ள காணிக்கு நேற்று காலை விவசாயிகள் சிலர் காட்டுப்பகுதிக்கு சென்றிருந்த சமயத்தில் உயிரிழந்த நிலையிலிருந்த யானையின் எச்சங்களை  கண்டுள்ளனர்.

இதையடுத்து பறயனாளங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்று இது குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் பத்து நாட்களுக்கு முன்னர் குறித்த யானையும் குட்டியும் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

உயிரிழந்த யானையின் சில பாகங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் விபத்துகளிலோ அல்லது வேறு காரணங்களினாலோ யானைகளின் இறப்பு வீதம் அதிகரித்து காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.