சீமெந்து விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அடுத்த வாரத்தில் இருந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீமெந்தின் விலையை குறைக்க அசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் 50 கிலோ சீமெந்து பொதியின் விலை 100 ரூபாவால் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வற் வரி மற்றும் ஏனைய வரிகள் குறைக்கப்பட்டதாலேயே  இவ்வாறு சீமெந்தின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.