மோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

Published By: R. Kalaichelvan

14 Dec, 2019 | 05:29 PM
image

நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற கடற்றொழில்சார் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்க வேண்டிய கடப்பாடு தனக்கு இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பு, மோதரை பிரதேசத்திற்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழில்சார் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

இதன்போது, கடலரிப்பு மற்றும் களனி கங்கையினால் இழுத்து வரப்பட்டு மோதரை பிரதேசத்தில் கரையொதுக்கப்படும் கழிவுகளினால் ஏற்படும் சுற்றாடல் பிர்ச்சினைகள் போன்றவை பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், கொழும்பு துறைமுக நகர திட்டத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கான நஷ்டஈடு வழங்குவதற்கு கடந்த அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், அவை மோதரை பிரதேசத்தில் வாழுகின்ற சுமார் 500 குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தினையும் பிதேச மக்கள் வெளிப்படுத்தினர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடியுமானாhல் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக குறித்த நஷ்டஈடு கிடைப்பதற்கு முயற்சி மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

அதேபோன்று ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது தொடர்பில் ஆராய்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்நாயக்காவிற்கு பணிப்புரை விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22