(இராஜதுரை ஹஷான்)

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் கடந்த அரசாங்கம் முன்னெடுத்த வீடமைப்பு நிர்மாண பணிகளில்  தேசிய  நிதி பாரியளவில் செலவிடப்பட்டுள்ளது. ஆனால்  நிர்மாண பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை. வீடுகளையும், தொழில்வாய்ப்புக்களையும் பெற்றுக் கொண்டவர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். என பொது நிர்வாகம் , வீடமைப்பு விவகாரம் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதியமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்காத்தில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நிர்மாண பணிகள் குறித்த விசேட கலந்துரையாடல்   பொது நிர்வாகம் , வீடமைப்பு விவகாரம் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதியமைச்சர் இந்திக அனுருத்த தலைமையில் அம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தில் நேற்று இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் அம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் முன்னெடுத்த அபிவிருத்தி பணிகள் மற்றும்  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி சபைக்குள் இடம் பெற்ற பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடந்த அரசாங்கம் 337    நிர்மாணிக்கப்பட்டன.இதில் 84 வீடுகள் மக்களிடம் கைளிக்கப்பட்டுள்ளது.மிகுதி 253 வீடுகளின்  நிர்மாண பணிகள் ஏதும் இதுவரை காலமும் முழுமைப் பெறவில்லை.

2015ம்  ஆண்டு மாதிரி கிராமங்கள் 15 மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு 77 மாதிரி கிராமம் நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 49 முழுமைப்படுத்தப்பட்டு மிகுதி 28 முழுமைப் பெறவில்லை. 2017  50 கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றில் 8 வீடுகள் மாத்திரமே முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு 104 வீடுகள் நிர்மானத்திற்கான மாதிரி கிராம நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றில் 15 கிராமங்கள் மாத்திரமே முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. இழுப்பறி நிலையில் உள்ள அபிவிருத்தி நிர்மாண பணிகளுக்கiளை முன்னெடுக்க வேண்டுமாயின் நிதி அவசியம் என நிர்மாண பணிகளின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கிராம சக்தி  அதிகாரிகள் 680 பேர் கடந்த அரசாங்கத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் காரியாலயம் தொடர்பில் எவ்விதமான உரிய ஆவணங்களும் காணப்படவில்லை.அரசியல் தேவைகளுக்காக கிராம சக்தி அதிகாரிகளின் ஊடாக 20000ஆயிரம்  கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இக்கடன் தொகை மீள பெற்றுக் கொள்ளப்பட்டதா என்பதற்கும்  ஆவணங்கள் காண்பிக்கப்படவில்லை. இவ்வாறு  அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு வீடமைப்பு நிர்மாணத்துறை ஊடாக   பாரிய நிதி செலவிடப்பட்டுள்ளது.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பணிகளின் மையப்படுத்தி செலவிடப்பட்ட நிதி மற்றும்  வழங்கப்பட்ட வீடமைப்பு கடன் வசதிகளின் ஊடாக பாரிய மோசடிகள் இடம் பெற்றுள்ளது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அம்பாந்தோட்டை மாவட்ட சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 480 மில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் வீடு அபிவிருத்திக்காக 350 மில்லியன் நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக  வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை  அதிகாரிகள் ஆவணங்களை  பகிரங்கப்படுத்தினார்கள்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு தரப்பினர் மாத்திரம் கடந்த அரசாங்கத்தினால் வீடுகளை பெற்றுக் கொண்டு இன்று நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.மிகுதி தரப்பினர் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொண்டு நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

நிர்மாண பணிகளினால் பெருமளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிர்மாண பணிகளில் பின்பற்றப்படும்  விடயங்களும்  மீளப்பட்டுள்ளது.