வவுனியா நகரசபை மற்றும் பொதுநூலகத்தின்  தேசியவாசிப்பு மாத பரிசளிப்பு விழா நிகழ்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று  நடைபெற்றது.

வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாலை அணிவிக்கப்பட்டு விருந்தினர்கள் பவனியாக அழைத்துவரபட்டதுடன்  மங்கள விளக்கேற்றலுடன், நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

நிகழ்வில் தேசிய வாசிப்பு மாத சிறப்பிதழ் ஒன்றும் தவிசாளரால் வெளியீடு செய்து வைக்கப்பட்ட துடன் அதன் முதல் பிரதியை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் றஞ்சன் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பொதுநூலகத்தால் நடத்தப்பட்ட வாசிப்பு மாத போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளால், பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப் பட்டது.

நிகழ்வில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் காஞ்சன, உபநகரபிதா சு.குமாரசாமி,  நகரசபை செயலாளர் இ. தயாபரன், வர்த்தகசங்க தலைவர் சுஜன் சண்முகராஜா, நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம், பா.பிரசன்னா,சு.காண்டீபன்,ஜெயவதனி, புஞ்சிகுமாரி, சமந்தா, நூலகர் பா.உருச்சந்திரன், பாடசாலை, மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.