சாவகச்சேரி கடற்கரை பிரதேசத்தை அண்டிய பள்ளிக்குடா கடற்கரை பகுதியில் 6 கிலோ கடலாமை இறைச்சியுடன் கடற்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால்  கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகள்  இடம்பெற்று வரும் நிலையில் சட்டவிரோத மீன்பிடி மற்றும் சட்டவிரோதமான முறையில் கடல் உயிரினங்களை பிடிப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை யும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையிலேயே  பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாவகச்சேரியை அண்டிய  பள்ளிக்குடா கடற்கரை பகுதியில்6 கிலோ கடலாமை இறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்குடா கடற்கரை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியதை அவதானித்த கடற்படையின் கரையோர பாதுகாப்பு பிரிவினர் அதில் ஒன்றினை  தொடர்ந்து சென்றபோது அவரிடமிருந்து  6 கிலோ கடலாமை இறைச்சி கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.