நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள நகரத்தில் வீடொன்றில் சக்திவாய்ந்த குண்டு வெடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி வீட்டு உரிமையாளர்,அவரது மகன் மற்றும் ஒரு பொலிஸார் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன், பொலிஸ் அதிகாரி மற்றும் மருந்துக் கடையை நடத்தி வந்த  வீட்டு உரிமையாளரான தொழிலதிபரின் மற்றொரு மகன் மற்றும் மகள் ஆகிய மூவரும் காயமடைந்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர் வீட்டின் நுழைவாயிலில் ஒரு மர்மபொருள் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து பரிசோதணை செய்த வேளை வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம் பெற்ற நகரம் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து தென்கிழக்கில் 200 கிலோமீட்டர் (125 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்த்திய நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவராத நிலையில் இது குறித்து கொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.