கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிரிகத்துள்ளது.

காச்சல், உடல் வலி, தலைவலி, சருமத்தில் திடீர் புள்ளிகள் போன்றவை இந் நோய்க்கான அறிகுறிகளாகும் என்று தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று தெரிவித்துள்ள பணிப்பாளர் தமது வீடு, வீட்டை சுற்றியுள்ள சுற்றாடலில் நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)