சட்டவிரோத கழிவு தேயிலை தூளுடன் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்களை கடுகண்ணாவ பகுதியில் வைத்து கைது செய்துள்ளதோடு ,  அவர்களிடமிருந்து சுமார் 5000 கிலோ கிராம் சட்ட விரோத கழிவு தேயிலை தூள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடுகண்ணாவையில் இருந்து லொறியில் கொழும்புக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்களை கடுகண்ணாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.