சப்ரகமுவ, மேல்,மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் . 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.