ஐயப்ப பக்தருக்கு சிலாபம் பிரேதச சபையில் எதிர்ப்பு 

Published By: R. Kalaichelvan

13 Dec, 2019 | 05:12 PM
image

(செ.தேன்மொழி)

கறுப்பு நிற ஆடையில் சிலாபம் பிரேதச சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதியில்லை என்று சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் ஜே. கோகிலநாத் சிங்கிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஜே.என். ஜனித்த தேவப்பிரிய எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சிலாபம் பிரதேச சபையின் 21 ஆவது அமர்வு நேற்று இடம்பெற்றது. இத் கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக சென்ற பிரதேச சபை உறுப்பினருக்கே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கூட்டத்தெடரில் கலந்துக் கொள்ளாமல் வெளியேறியுள்ள குறித்த உறுப்பினர் புத்தளத்திலுள்ள சர்வமத குழுவின் தலைவர் சுந்தரம் குருக்களிடம் முறைபாடொன்றையும் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பிரதேசசபை உறுப்பினர் கூறுகையில், 

14 வருடங்களாக ஐயப்ப தரிசனம் மேற்கொண்டுவருகின்றேன் ,கடந்தவருடமும் ஐயப்பன் தரிசனத்தை மேற்கொள்ள மாலை அணிந்திருந்தேன் . அப்போது நான் கறுப்பு நிற ஆடைகளை அணிந்தே பிரதேச அமர்வுகளில் கலந்துக் கொண்டேன். ஆனால் அப்போது எனக்கு எவ்வித எதிர்புகளும் தெரிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னரான முதல் அமர்வே நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.இதன்போது நான் கறுப்பு நிற ஆடையில் வந்திருப்பதினால் எனுக்கு அனுமதியில்லை என்று  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஜே.என். ஜனித்த தேவப்பிரிய தெரிவித்தார். 

பின்னர் நான் அமர்வில் கலந்துக் கொள்ளாது அங்கிருந்து வந்து விட்டேன்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் சர்வஜன மத குழுவின் புத்தளம் பகுதி தலைவரிடமும் முறைப்பாடளித்துள்ளேன். எதிர்வரும் திங்கட்கிழமை குருணாகல் பிரதேசத்தின் தேர்தல் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடளிக்க தீர்மானித்துள்ளளேன்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00