புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிப்பது என்பது கடும் சவாலானது. இதன் போது ஏற்படும் வலியை அவர்களால் தாங்கிக்கொள்ள முடி வதில்லை.

இதனால் தற்பொழுது இவர்களுக்கென்று பிரத்யேகமாக மின்னாற்றலால் இயங்கக் கூடிய படுக்கை ஒன்று அறிமுகமாகியி  பலனளித்து வருகிறது. 

குறித்த படுக்கையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை படுக்க வைத்து, அவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கும் பொழுது வலி என்பது குறைவாக இருக்கிறது, அத்துடன் படுக்கை முழுவதும் மின்னாற்றலால் இயங்கக் கூடியது என்பதால், குழந்தைகளுக்கு மின் அதிர்வு மூலம் சிகிச்சை வழங்குவது எளிதாகிறது.

இத்தகைய மின்னாற்றல் இயங்கக்கூடிய படுக்கை ஒன்றின் விலை இந்திய மதிப்பில் ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த பிரத்யேக படுக்கை மூலம் பச்சிளம் குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை வழங்குவது எளிதாக இருப்பதாக வைத்திய நிபுணர்களும், பெற்றோர்களும் தெரிவிக்கிறார்கள்.