யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் கழிவுப் பொருட்களைச் சேகரிக்கும் நிலையங்களை உருவாக்குவது என யாழ்.மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தலைமையில் இன்று இடம்பெற்றது.இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண பிரதேச செயலர் தி.சுதர்சன் குறித்த விடயத்தைக் கொண்டுவந்தார்.இதனை ஆராய்ந்து அதனை நடைமுறைப் படுத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நுளம்புகள் பரவுவது தொடர்பில் நீண்ட விவாதம் நடைபெற்றது.இதில் அதிகாரிகள் டெங்கு கட்டுப்பாடுகள் தொடர்பில் எவ்வளவு முயற்சிகள் நடவடிக்கைகள் எடுத்தாலும் மக்கள் தங்களின் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் சரியாகச் செயற்படும் வரை நாம் இலக்கை அடிய முடியாது என்பதைச் சுட்டிக் காட்டினர்.
மேலும் டெங்கு நுளம்புகளுக்குப் புகைகள் அடிக்கப்பட்டாலும் வீடுகளில் உள்ள கழிவுப் பொருட்களை முகாமைத்துவம் செய்து உரிய முறையில் அகற்றும் வரையில் அவ்விடங்களில் நுளம்புக் குடம்பிகள் ஊடாக பெருக்கம் அதிகமாகவே இருக்கும்.எனவே மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கழிவுப் பொருட்களை முகாமைத்துவம் செய்து உரிய இடங்களில் போட வேண்டும்.
அவ்வாறான முறைமைக்கு அனைத்து உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாகவும் ஒவ்வொரு வட்டாரத்திலும் கழிவுப் பொருட்கள் சேகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.அவ்வாறு உருவாக்கப்படும் நிலையங்களில் இரண்டு தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும்.மேலதிகமாக கண்காணிப்புக் கெமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிப்பும் நடைபெற வேண்டும்.இவ்வாறு செய்யும் பட்சத்தில் மக்கள் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவது குறைவடையும்.உடனடியாக இதனைச் செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது.
குறித்த கோரிக்கைக்கு அனைத்து உள்ளுராட்சி மன்ற தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.அதற்கமைய இந்த கலந்துரையட்லில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM