தேசிய ஸ்குவாஷ் சம்­பி­யன் ஷிப் போட்­டிகள் நாளை முதல் 12ஆம் திக­தி­வரை சுக­த­தாச உள்­ளக அரங்கில் நடை­பெ­ற­வுள்­ளன.

சுக­த­தாச உள்­ளக அரங்கில் நடை­பெ­ற­வுள்ள 26 ஆவது தேசிய ஸ்குவாஷ் சம்­பியன்ஷிப் போட்­டிகள் ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என்று இரு பிரி­வு­க­ளிலும் நடை­பெ­று­கி­றது. அதேபோல் இரு பிரி­வு­க­ளிலும் 09,11,13,15,17 ஆகிய வய­திற்கு கீழ் உள்ள வீரர்­க­ளுக்­கி­டையே இப்­போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.

இப்­போட்­டி­க­ளுக்கு தொட ர்ந்து ஆறா­வது முறை­யாக ரிட்ஸ்பரி நிறு­வனம் அனு­ச­ர­ணை வழங்­கு­கின்­றது. ஸ்குவாஷ் சங்­கத்தின் ஏற்­பாட்டில் நடை­பெறும் இப்­போட்டித் தொட­ருக்­கான அனு­ச­ர­ணையை வழங்கும் நிகழ்வு நேற்­று­முன்­தினம் கொழும்பு ஒலிம்பிக் இல்­லத்தில் நடை­பெற்­றது.

இந்­நி­கழ்­விற்கு ஸ்குவாஷ் சங்கத் தலைவர், விளை­யாட்­டுத்­து­றையின் பணிப்­பாளர் நாயகம் மற்றும் ரிட்ஸ்­பரி நிறு­வ­னத்தின் அதி­காரிகள், இச்­சம்­பி­யன்ஷிப் போட்­டியில் கலந்­து­கொள்ளும் வீர வீராங்­க­னை­களும் கலந்­து­கொண்­டனர்.

இந்­நி­கழ்வில் பேசிய இலங்கை ஸ்குவாஷ் சங்­கத்தின் தலைவர் சுரஞ்சித் பிரே­ம­தாஸ, நாடு பூரா­கவும் ஸ்குவாஷ் விளை­யாட்டை நாம் கொண்டு செல்­கிறோம். அதை அனை­வ­ரி­டமும் கொண்டு சேர்க்­க­வேண்டும் என்­பதே எமது முக்­கிய நோக்கம். தற்­போது ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் பிரிவில் நாம் இல்லை. விரைவில் ஒலிம்பிக்கில் இடம்பெறவைப்போம் என்று அவர் தெரிவித்தார்.