சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற முடிவை மாற்றி ஓய்வுபெறுவதைக் கைவிட்டார் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சகல துதறை ஆட்டக்காரர் டிவைன் பிராவோ.

இதனையடுத்து இருபதுக்கு - 20 அணித்தேர்வுக்கு தன் பெயரைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டிவைன் பிராவோ அக்டோபர் 2018 இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இறுதியாக 2016 ஆம் ஆண்டு ஒக்டோபரில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட்டில் ஆடினார்.

இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

“சர்வதேச கிரிக்கெட்டிற்கு நான் மீண்டும் திரும்பும் அறிவிப்பை உறுதி செய்கிறேன். வாரியத்தின் நிர்வாக மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறினார்.