கோறளைப்பற்று வாழைச்சேனை  பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசிவன் தீவு ஆற்றில் யானை ஒன்றின் உருக்குலைந்த  உடலை பிரதேச வாசிகள் கண்டெடுத்துள்ளதாக கிராம சேவகர் கா. ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகக் குறித்த யானை வெள்ள நீரில் அகப்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 2 நாட்களாகக் குறித்த ஆற்றில் மிதந்த யானையின் உடற்பாகத்தினை அடையாளம் காணமுடியாமல் பிரதேச வாசிகள் சந்தேகம் கொண்டு கிராம சேவகருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்

தற்போது துர்நாற்றம் வீசுவதுடன் ஆற்றின் நீரும் மாசுபட்டு கிருமிகளின் தாக்கத்திற்கு உள்ளாகப்படும் சூழ் நிலை காணப்படுகிறது.மீனவர்கள் குறித்த ஆற்றில் மீன்பிடியில் ஈடுபடுவதனை நிறுத்தியுள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பாக யானையின் உடலினை ஆற்றிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள கிராம சேவகர் பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகத் தகவல் தெரிவித்தார்.