(இராஜதுரை ஹஷான்)

நெவில் பெர்னாந்து தனியார் வைத்தியாலை நிர்வாக பரிபாலனத்திற்கு வருடத்திற்கு சுமார்  3000 மில்லியன் ரூபா செலுத்தி அரச நிதியை முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மோசடி செய்துள்ளார்.  

இம்மோசடி தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் பிரச்சார செயலாளர் மொஹமட் முஸம்மில் இன்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவில்முறைப்பாடுசெய்துள்ளார்.

இந்த நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்ய  சென்ற போது  முறைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் பின்னரே  குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.