இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் சுமார் மூன்றரை மணிநேர தாமதத்தின் பின்னர் பிற்பகல் 1.10 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 மணி) ஆரம்பமானது.

இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்தது. தனஞ்சய டி சில்வா 72 ஓட்டங்களிலிருந்தும் டில்ருவன் பெரேரா 11 ஓட்டங்களிலிருந்தும் தங்களது இன்னிங்ஸ்களைத் தொடர்ந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டம் சுமார் ஒரு மணி நேர தாமதத்தின் பின்னர் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்புகள் இருந்துது. ஆனால், விரல்விட்டு எண்ணக்கூடிய மைதான உதவியாளர்களே பணியில் ஈடுபட்டுள்ளதாலும் ஆடுகளத்தையும் அதனைச் சூழவுள்ள பகுதியையும் மூடியிருந்த விரிப்புகளை வேளையோடு அகற்றுவதற்கு மத்தியஸ்தர்கள் இணங்காததாலும் முதலாவது ஆட்ட நேர பகுதி முழுமையாக விளையாடப்படாமல் கைவிடப்பட்டது.

இலங்கை போன்ற நாடுகளில் ஏகப்பட்ட மைதான உதவியாளர்கள் இருப்பதால் இத்தகைய தாமதங்கள் தவிர்க்கப்படுகின்றமை குறி;ப்பிடத்தக்கது.