ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு குறித்த நபர்களை இரத்மலான , கொலன்னாவ , இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்துள்ளனர்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து 4360 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.